இலக்கியம்

இயல்பில் உயிர்த்த கதைகள்

செய்திப்பிரிவு

வாழ்வெனும் பெரு நதி பாய்ந்தோடும் பாதையெங்கும் கதைகள் செழித்து வளர்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது இந்தியாவில் எழுதப்படும் பிறமொழிச் சிறுகதைகளும் உலகச் சிறுகதைகளும் தமிழில் வாசிக்கக் கிடைக்கின்றன. உருது மொழியில் பத்து எழுத்தாளர்கள் எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பாக சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ‘உருதுக் கதைகள்’. இதனை முக்தார் பத்ரி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

‘முட்டாள்கள் வீடு கட்டுகிறார்கள் புத்திசாலிகள் அதில் வாடகைக்கு வருகிறார்கள்’ என்று யாசின் அஹ்மத் எழுதிய ‘வேலி போடாத கனவு’ என்கிற முதல் சிறுகதையின் தொடக்கமே நம்மைச் சட்டென கதைக்குள் உள்ளிழுத்துக்கொள்கிறது. சமூகத் தளத்தில் விவாதத்தைத் தூண்டும் அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாதவை இத்தொகுப்பிலுள்ள கதைகள் என்றபோதிலும், வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்கிற மனிதர்களை இயல்பாய் நம்மிடம் அறிமுகம் செய்வதில் இக்கதைகள் நம்மைக் கவனிக்க வைக்கின்றன.

- சின்னமுருகு

உருதுக் கதைகள் தமிழில்: முக்தார் பத்ரி
விலை: ரூ.70/-
முல்லைப் பதிப்பகம், சென்னை- 600 040.
தொடர்புக்கு: 98403 58301.

SCROLL FOR NEXT