உட்பொருள் அறிவோம்,
ஆனந்த் கிருஷ்ணா
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
விலை: ₹200 தொடர்புக்கு: 74012 96562
‘இந்து தமிழ்’ இணைப்பிதழான ‘ஆனந்த ஜோதி’யில் சிந்துகுமாரன் எழுதி வெளியான ‘உட்பொருள் அறிவோம்’ தொடரானது எத்தகைய கனமான விஷயங்களையும் தமிழ் வாசகர்களிடம் சேர்ப்பிக்க முடியும் என்பதற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. மேற்கத்திய, கீழைத்தேய தத்துவ, ஆன்மிக மரபுகளைக் கற்றறிந்தவரும், நல்ல மனநல ஆலோசகருமான ஆனந்த் கிருஷ்ணா, சிந்துகுமாரன் என்ற பெயரில் எழுதிய இந்தத் தொடர் இப்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது. மனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடயங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறது இந்நூல்.