இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: அழகிய பெரியவன்

செய்திப்பிரிவு

1942-ல் அம்பேத்கரின் முயற்சியில் தொடங்கப்பட்டது பட்டியல் இனத்தோர் கூட்டமைப்பு. இந்தியா முழுவதும் தலித் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தது.

செத்த மாட்டை அப்புறப்படுத்த அழைப்பது போன்றவற்றை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியது. வேலூர் மாவட்டத்திலும் இப்போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது தொடங்கி, சமகாலம் வரையிலான தலித் பிரச்சினைகளை நாவலாக எழுதி முடிக்க இருக்கின்றேன். நாவலின் தலைப்பு ‘வல்லிசை’

புதிய மாதவி தமிழில் மொழிபெயர்த்த ‘கதவுகள் திறக்கும் வானம்’ கவிதை நூலைச் சமீபத்தில் படித்தேன். தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட தற்கால இந்தியப் பெண் கவிஞர்களின் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.

ஒரு படைப்பென்பது சமூகம் சார்ந்த மரபு, பண்பாடு மீது கேள்வி எழுப்ப வேண்டும். அந்த விஷயத்துக்கு வலு சேர்ப்பதாக இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் இருக்கின்றன.

SCROLL FOR NEXT