கால தேச வர்த்தமானங்களைக் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் பராக்கா. அந்தப் படத்தின் காட்சிகள் வழியாகத்தான் அடைந்த அனுபவத்தை வார்த்தைகளில் கடத்துவதற்கு நூலாசிரியர் செய்திருக்கும் முயற்சியே இந்த நூல். பக்கத்துக்குப் பக்கம் விதவிதமான உணர்ச்சிகள், அறைகூவல்கள், போராட்டங்கள், பொழுதுபோக்குகள், விழிப்புணர்வுகள், பழிவாங்கல்கள், மனித நேயத்தின் அவசியம் இப்படிப் பல அம்சங்களும் இந்நூலில் உள்ளன. புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடிக்கும்போது, பங்கேற்பாளராக இல்லாவிட்டாலும், இந்தப் புத்தகச் சாளரத்தின் மூலமாக உலகின் பார்வையாளராக நாம் ஆகிவிட்ட உணர்வு ஏற்படும்.
- ரவிக்குமார்
சொல்லில் அடங்காத உலகம்
பா.ராமமூர்த்தி
விலை ரூ.90, வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
சென்னை 14. தொலைபேசி: 044-28482441,
மின்னஞ்சல்: pavai123@yahoo.com