பச்சை வைரம்
கொ.மா.கோ.இளங்கோ
புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியீடு
தேனாம்பேட்டை, சென்னை-18.
தொடர்புக்கு:
044-24332424
விலை: ரூ.120
அமெரிக்கர்களுக்கு ஆப்பிரிக்கர்கள் அடிமையான வரலாற்றையும், அடிமைகளாகக் கறுப்பினத்தவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளையும் சிறுவர்களுக்குக் கதைகளாகச் சொல்லும் நாவல்தான் கொ.மா.கோ.இளங்கோ எழுதிய ‘பச்சை வைரம்’. அடிமை என்ற வார்த்தையை முதன்முறையாக அறிந்துகொள்ளும் 13 வயதுச் சிறுமியான பிளகியின் வாயிலாக, கறுப்பினத்தவர்கள் அடிமையான வரலாறு, அந்த அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்குக் காரணமாக இருந்த புரட்சி, அவர்களுடைய சுதந்திரத்தின் அடையாளமாக இருக்கும் இலவ மரம் ஆகியவை கதைகளாக விவரிக்கப்படுகின்றன. சிறுவர்களுக்காக எழுதுகிறோம் என்பதால், எல்லாவற்றையும் முழுவதுமாக விவரித்துவிடாமல் அவர்கள் நாவலோடு உரையாடுவதற்கான இடைவெளியும், கற்பனை செய்து பார்ப்பதற்கான வித்தும், அழகிய ஓவியங்களும் நாவலில் உள்ளன. சிறுவர் இலக்கியத்தில் இந்நாவல் ஒரு நல்வரவு.
-