இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: அஜயன் பாலா

செய்திப்பிரிவு

குறியீடுகளும் சமிக்ஞைகளுமான ஒரு புனைவுலகத்தைச் சிறுகதைகளாக எழுதிவந்திருக்கிறேன். அதே பாணியில், தற்போது முதன்முறையாக நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘நீரூற்று இயந்திரப் பொறியாளன்’ எனும் அந்த நாவல் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் உள்ளது. வரும் புத்தகத் திருவிழாவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன்.

மு. சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நான் சமீபத்தில் படித்த நாவல். காவல் நிலையங்களின் பின்னால் எழும் மரண ஓலங்களின் துயர்மிகு வலிகள் ரத்த வரிகளாக நம் இதயத்தை ரணமாக்குகின்றன.

மிகச் சிறந்த தனிமனித ஆவணமாக நீதிபதி கிருஷ்ணய்யர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்நாவல், இயக்குநர் வெற்றி மாறன் மூலம் ‘விசாரணை’ எனும் திரைப்படமாகி, வெனிஸ் திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

SCROLL FOR NEXT