ஷேக்ஸ்பியரின் 400-வது ஆண்டு நினைவை முன்னிட்டு ஜேம்ஸ் ஷபிரோ, 1606 என்ற நூலை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியர் வாழ்வில் 1606-ம் ஆண்டு மிகமுக்கியமான வருடமாகும். கிங் லியர், மேக்பத், ஆண்டனி அண்டு கிளியோபாட்ரா ஆகிய அவரது முக்கியமான ஆக்கங்கள் அரங்கேற்றப்பட்ட ஆண்டு அது.
அதே ஆண்டில்தான் இங்கிலாந்தை ப்ளேக் தாக்கி மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தனர். அரசியல் ரீதியாகவும் கொந்தளிப்பும், நிச்சயமின்மையும் நிலவிய சூழலில் ஷேக்ஸ்பியரின் சொந்த வாழ்க்கை மற்றும் நாடகங்கள் மீது ஏற்படுத்திய தாக்கங்களை ஜேம்ஸ் ஷபிரோ இப்புத்தகத்தில் ஆராய்ந்துள்ளார்.
ஷேக்ஸ்பியர் காலத்து இங்கிலாந்து நம் கண்முன்னால் விரிகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ப்ளேக் நோய் ஷேக்ஸ்பியரைத் தாக்கியிருந்தால் உலக நாடக வரலாறே மாறியிருக்கலாம்.