இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும் - ம. காமுத்துரை

செய்திப்பிரிவு

கடந்த எட்டாண்டுகளாக சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் வேலையைச் செய்துவருகிறேன். சமையல் தொழிலாளர்களோடு நெருங்கிப் பழகும் சூழலும், அவர்களது வேலைப்பளுவை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும் வாய்த்தது. அவ்வாறு பார்த்த - பழகிய அனுபவங்களை அவ்வப்போது சில சிறுகதைகளாகவும் எழுதியிருக்கிறேன். தற்போது சமையல் தொழிலாளர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் நாவலொன்றை எழுதிவருகிறேன்.

நோபல் பரிசு பெற்ற நாகிப் மாஃபஸ் எழுதிய ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ நாவலை சமீபத்தில் படித்தேன். ’1001 அரேபிய இரவுகள்’ முடிவடையும் இடத்தில் இந்த நாவல் தொடங்குகிறது. மத அதிகாரத்துக்கும் அரசியல் அதிகாரத்துக்கும் இடையேயான பிணைப்பை மறைமுகமாக சாடுகிறது இந்நாவல். புகழ்பெற்ற அரேபிய மாயாஜாலக் கதைகளின் வழியே சொல்லப்படுகிற இந்நாவலை, வாசிப்புக்குச் சற்றும் நெருடலைத் தராத வண்ணம் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் சா.தேவதாஸ்.

SCROLL FOR NEXT