எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப் படங்களின் வேலைகளுக்கு மத்தியில் கடந்த 9 ஆண்டுகளில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து இந்த ஆண்டு ஒரு தொகுப்பாக வெளியிட உள்ளேன். அரசியல், இசை, குழந்தைகள் உலகம் என இதுவரை எழுதியிராத வகைமைகளில் எழுதிப்பார்த்திருக்கிறேன். சென்ற ஆண்டு ஒரு கட்டுரை தொகுப்பு வந்திருந்தாலும் ஒரு கவிதைத் தொகுப்பு வருவதே கூடுதல் மகிழ்ச்சிதான்.
கவிஞர் கண்டராதித்தனின் ‘திருச்சாழல்’ கவிதைத் தொகுப்பை சமீபத்தில் வாசித்தேன். மரபின் கூறுகளையும் நவீனத்தையும் புதிய மொழிக் கண்ணிகளால் இணைக்கும் கண்டராதித்தன் கவிதைகள் தனித்த உள்ளடக்கம் கொண்டவை. சொல்லல் முறையில் புதிய சாரளங்களை இந்தக் கவிதைகள் திறந்துவைக்கின்றன.