இலக்கியம்

கையளவில் கவிதை உலகு

செய்திப்பிரிவு

புத்தகத் தயாரிப்பில் கற்பனை அதிகமில்லாமல் ஒரே மாதிரியான வடிவத்தில் புத்தகங்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் உள்ளங்கையளவு ஒரு குட்டிப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. ‘புள்ளி’ என்பது இதன் பெயர். நவீனக் கவிதையுலகின் முக்கியமான ‘புள்ளி’களின் கவிதைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. க.நா.சு, நகுலன், ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, கலாப்ரியா, பாலகுமாரன், நா. ஜெயராமன் முதலான கவிஞர்களின் நறுக்குத் தெறித்தாற்போன்ற குறுங்கவிதைகள் கைக்குள்ளும் மனதுள்ளும் சலசலக்கின்றன.

விருட்சம் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் விலை 5 ரூபாய்தான். கூடுதலாக, ஆதிமூலம் மற்றும் சிதம்பரகிருஷ்ணன் ஆகியோரின் கோட்டோவியங்களும் இருக்கின்றன. புத்தகம் கிடைக்குமிடம்: டிஸ்கவரி புக் பேலஸ், தொலைபேசி 9940446650.

SCROLL FOR NEXT