இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும் - எழுத்தாளர் நா. விச்வநாதன்

செய்திப்பிரிவு

ஐநூறு ஆண்டு கால தஞ்சையை மையமாக வைத்து `லட்சுமிராஜபுரம்’ என்ற நாவலொன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே பகுதியில் தமிழ், மராத்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, இந்தி, செளராஷ்டிரம் பேசும் மக்களைத் தஞ்சையில் தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. இதில் சரபோஜிக்கும் முக்கியமான இடம் இருக்கிறது. ஸ்வார்ட்ஸ் அய்யர் என்ற பாதிரியாரால் வளர்க்கப்பட்டு, பல்துறை வல்லுநராக ஆன சரபோஜி முறையற்ற விதத்தில் அரியணையேறுகிறான். இல்லாத பெருமைகளெல்லாம் சரபோஜிமேல் திணிக்கப்பட்டு மராத்திய வரலாறு கட்டமைக்கப்படுகிறது. ‘மங்கள விலாஸம்’ என்ற பெயரும் மனதில் இருக்கிறது.

தஞ்சை ப்ரகாஷின் `கரமுண்டார் வீடு’ புதினத்தைத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். தஞ்சாவூர்ப் பகுதியைச் சேர்ந்த சமூகத்தின் வாழ்வியல் சித்திரமிது. சாதி, பழிக்குப் பழி, சண்டை, ரத்தம், குலப்பெருமைக்காக அனைத்தையும் இழத்தல், வன்மம் எனப் புதினம் முழுவதும் ஒரு நெடிய வரலாறுதான். எல்லை மீறிய காமம்கூட நேர்த்தியாக வந்திருக்கிறது. இந்தப் புதினம் அதிகம் கவனிக்கப்படாமல் போனது குறித்து வருத்தமே.

SCROLL FOR NEXT