‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’. சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடரில் அவர் கவனப்படுத்தினார். அவருடைய தனிக் கட்டுரைகளைப் போலவே, இந்தத் தொடரும் வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்தக் கட்டுரைகள் தற்போது தொகுக்கப்பட்டு, நூலாக வெளிவருகிறது. இயற்கை பெருமளவு சீரழிக்கப்பட்டுவரும் நிலையில், சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலை இந்த நூல் மேம்படுத்தும்.
விண்ணளந்த சிறகு
சு.தியடோர் பாஸ்கரன்
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு: 74012 96562
விலை: ரூ.150