இலக்கியம்

பிறமொழி நூலகம்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உள்ளே ஒரு பார்வை

செய்திப்பிரிவு

தி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்
தினேஷ் நாராயணன்
பெங்குயின் வெளியீடு
விலை: ரூ.699

இன்னும் ஐந்தாண்டுகளில் நூற்றாண்டைக் காணவிருக்கிறது ‘ஆர்.எஸ்.எஸ்.’ எனும் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் சங்’. கடந்த காலத்தைப் பொற்காலமாக உருவகித்து இந்தியாவை ஒற்றை இந்து தேசியமாக மாற்றும் கனவில் அது முன்னேறிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் வழித்தோன்றலான பாஜக ஆட்சியில் இருப்பதால் அதன் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலான காரியங்கள் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்படுகின்றன. நாட்டின் மீதும் அரசின் மீதும் இவ்வளவு செல்வாக்கு கொண்டிருந்தாலும், அந்த அமைப்பு பெரிதும் ரகசிய இயக்கம்போலவே செயல்படுகிறது. அதன் புதிர்களையெல்லாம் அவிழ்த்துப் பார்க்கும் முயற்சியில் சமீப காலமாகப் பல புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்துக்காக தினேஷ் நாராயணன் பல்வேறு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் பிரச்சாரகர்களையும் தொண்டர்களையும் சந்தித்திருக்கிறார். பேசும் கொள்கை அளவிலும், உள்ளடக்கப் பண்பு அளவிலும், செயல் அளவிலும் ஆர்.எஸ்.எஸ். எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை மூன்று தளங்களோடும் பொருத்திப் பேசுவது இந்த நூலின் முக்கியமான அம்சம். ஆர்.எஸ்.எஸ். மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும் சரி, அதன் தீவிரமான விமர்சகர்களுக்கும் சரி இந்நூல் ஒரு நல்வரவு.

- தரணி

SCROLL FOR NEXT