தற்போது ‘நடராஜ் மகராஜ்’ என்ற பெயரில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அதை எடிட்செய்யும் பணியைச் செய்துகொண்டிருக்கிறேன். வரலாற்றின் கேலிச்சித்திரமாக எஞ்சியிருக்கும் ஓர் எளிய மனிதரின் கதைதான் இந்த நாவல். இந்த ஆண்டு இந்நாவல் வெளிவரும்.
டி.டி. கோஸாம்பியின் ‘பண்டைய இந்தியா’ புத்தகத்தை இருபது வருட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் படித்தேன். பண்டைய இந்தியாவின் வரலாற்றை, கலாச்சாரப் பின்னணியுடன் சொல்லும் புத்தகம் இது. உலக வரலாற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்தப் புத்தகம் அளிக்கிறது.