முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களான காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் தொடங்கி லால்பேட்டை எம்.ஏ.அபுசாலிஹ் வரையிலான ஒன்பது பேர்களின் பேருரைகள் ஏற்கெனவே முதல் பாகமாக வெளியாகியிருந்தன. இப்போது எம்.ஏ.லத்தீப், ஏ.ஷாகுல் ஹமீத், ஆ.கா.அ.அம்துல் சமத், வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் ஆகியோரின் பேருரைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாகியிருக்கின்றன. முக்கியமானதொரு அரசியல் ஆவணம் இந்தப் புத்தகம்.
முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள்
இரண்டாம் பாகம்
தொகுப்பாசிரியர்:
கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளியீடு
மண்ணடி, சென்னை-1.
தொடர்புக்கு: 044-2521 8786
விலை: ரூ.100
தமிழ்நாட்டில் உலக சினிமா மீது ஆர்வம் கொண்டு நுழைபவர்கள் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாமல் கேட்கும் பெயராக க்வென்டின் டாரன்டினோ பெயர் மாறியிருக்கிறது. டாரன்டினோவின் படங்களையெல்லாம் நுட்பமாக அலசி, அவருக்கென 160 பக்கங்களில் ஒரு புத்தகம் கொண்டுவந்திருக்கிறார் ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன். இந்தப் புத்தகம் ஆய்வு நோக்கிலான பார்வையைக் கொண்டிருக்கவில்லை; மாறாக, டாரன்டினோவின் ஆத்மார்த்தமான ரசிகரின் பார்வையாக வெளிப்படுகிறது.
தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள்
ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
வாசகசாலை பதிப்பகம்
கிழக்கு தாம்பரம், சென்னை-73.
தொடர்புக்கு: 99426 33833
விலை: ரூ.170