இலக்கியம்

அழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ

ரிஷி

இணையத்தில் தீவிர வாசிப்புக்கான வாசலைத் திறந்துவைக்கும் வலைப்பூ என்று அழியாச் சுடர்களைச் சொல்லலாம். இதன் துணைத் தலைப்பு சொல்வதைப் போல இது நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம், இணைய இதழ் அல்ல.

பாரதியார், பிரமிள், எம்.வி. வெங்கட்ராம், நகுலன், மௌனி, அசோகமித்திரன், வண்ணநிலவன் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் படைப்புகளையும் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். 2008-ல் தொடங்கப்பட்ட இந்த வலைப்பூவில் 2014 டிசம்பருக்குப் பின்னர் புதிய பதிவு எதுவும் இடம்பெறவில்லை.

இதன் இணைப்பாக உலக இலக்கியம் என்னும் பெயரில் தமிழில் வெளியான இலக்கிய மொழிபெயர்ப்புகளையும் ஒரு வலைப்பூவில் அளித்திருக்கிறார்கள். சில மொழிபெயர்ப்புகளின் கீழே, அவை வெளியான இதழ்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. சில படைப்புகளில் அந்த விவரங்கள் இல்லை. இலக்கிய வாசிப்பை எல்லோரிடமும் கொண்டுபோகும் முனைப்போடு செயல்படும் இந்த வலைப்பூவின் முகவரி: >http://azhiyasudargal.blogspot.in/

SCROLL FOR NEXT