அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியவியல் அறிஞர் வெண்டி டோனிகர், இந்தியாவின் புராதனக் காம ஒழுக்கவியல் நூலான காமசூத்ரம் குறித்து சமகால நோக்கில் ஒரு நூலை எழுதியுள்ளார்.
அந்த நூலின் பெயர் தி மேர்ஸ் ட்ராப்- நேச்சர் அண்ட் கல்ச்சர் இன் தி காமசூத்ரா (The Mare’s Trap: Nature and Culture in the Kamasutra).
புராதன இந்தியாவில் நகரியச் சூழலில் வாழும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாழும் கலையைச் சொல்லிக் கொடுக்கும் நூல் இது என்கிறார் டோனிகர். அத்துடன் காமசூத்ரா நூலில் தற்போது பேசப்படும் பாலின சமத்துவக் கருத்துகள் உள்ளதாகவும் டோனிகர் வாசித்திருக்கிறார். பெண்களின் ஆசாபாசங்களை காமசூத்ரா பரிசீலிப்பதாகவும் கூறுகிறார்.