இலக்கியம்

வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பில் ‘தி இந்து’ நாளிதழ் அரங்கு (எண்-180)

செய்திப்பிரிவு

ஈரோடு புத்தகத் திருவிழாவில், ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் அரங்கு (எண் - 180) அமைக்கப்பட்டுள்ளது. ‘மெல்லத் தமிழன் இனி...’, ‘கடல்’, ‘நம் மக்கள், நம் சொத்து’, ‘வேலையைக் காதலி’ உள்ளிட்ட ‘தி இந்து’ வெளியிட்ட தமிழ் நூல்களும் ‘சித்திரை மலர்’, ‘பொங்கல் மலர்’ போன்றவையும் 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன.

கூடவே, ‘சயின்டிபிக் ஃபேக்ட்ஸ்’,‘இந்து ஸ்பீக்ஸ் ஆன் மேனேஜ் மெண்ட்’, ‘மகாத்மா காந்தி லாஸ்ட் 200 டேஸ்’ உள்ளிட்ட ஆங்கில வெளியீடு களையும் ஆர்வத்துடன் வாசகர்கள் வாங்கிச் செல்கிறார்கள். இத்துடன், ‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களின் மாதச் சந்தா மற்றும் ஆண்டுச் சந்தா இந்த அரங்கில் முன்பதிவு செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT