இலக்கியம்

சிற்றிதழ் அறிமுகம்: ஐராவதம், போர்ஹே மற்றும் டேனில் கார்ம்ஸ்

செய்திப்பிரிவு

சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கிறது ‘புது எழுத்து’ இலக்கிய இதழ். ‘ஆண்டுக்கு மூன்று இதழ்கள் வெளிவரும், கடைகளுக்கு அனுப்பப்பட மாட்டாது; இதழைப் பெற விரும்புபவர்கள் அஞ்சல் செலவுக்கான தொகையையும் சேர்த்து அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று அறிவித்திருக்கிறார் மனோன்மணி. தற்போது வெளிவந்திருக்கும் இதழில் மறைந்த தொல்லெழுத்து ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனுக்குச் சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பழங்குடிச் சடங்குகள் வெறும் கலை வெளிப்பாடுகள் மட்டுமில்லை, சமூக எதிர்வினையும்கூட என்று விளக்கும் போர்ஹேவின் கட்டுரையை வெளி ரங்கராஜன் மொழிபெயர்த்திருக்கிறார். ரஷ்ய எழுத்தாளர் டேனில் கார்ம்ஸ் பற்றிய கே.ஜி.ராமின் கட்டுரையும் இவ்விதழின் குறிப்பிடத்தக்க ஒன்று.

- செ.இளவேனில்

புது எழுத்து
ஆசிரியர்: மனோன்மணி
காவேரிப்பட்டினம்-635112.
98426 47101
விலை: ரூ.150

SCROLL FOR NEXT