இலக்கியம்

நூல்நோக்கு: பாவனையற்ற கதைகள்

முகம்மது ரியாஸ்

ராக்கெட் தாதா
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002.
விலை: ரூ.190
99425 11302

ஜி.கார்ல் மார்க்ஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராக்கெட் தாதா’விலுள்ள கதைகளை, சிறுநகரம் சார்ந்த மத்திய வர்க்கத்தின் உணர்வுத் தருணங்களை மையப்படுத்தும் கதைகளாக அடையாளப்படுத்தலாம். கார்ல் மார்க்ஸ் தான் கையாளும் வாழ்க்கையைப் பாவனையின்றி அணுகுகிறார். இந்தக் கதைகள் சமூக நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுக்கக்கூடியவை அல்ல; மாறாக, அந்நிகழ்வுகளின் உணர்வுப் பரிமாணங்களை மீள்உருவாக்கம் செய்வதாக அமைகிறது. தலைப்புக் கதையான ‘ராக்கெட் தாதா’ முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட கதைகளில் சிறந்த ஒன்றாக அமையும். முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் இத்தன்மையிலான கதைகளை எழுதியிருக்க முடியும். இருந்தும், இதுபோன்ற கதைகள் சூழலுக்கு எப்போதும் தேவைப்படக்கூடியதாகவே இருந்துவருகின்றன. அந்த வகையில், இத்தொகுப்பு குறிப்பிடத்தக்கது.

- முகம்மது ரியாஸ்

SCROLL FOR NEXT