‘ஹனுமான்’ நாடகத்தில் ஒரு காட்சி 
இலக்கியம்

டம்மீஸ் டிராமாவின் ‘ஹனுமான்’ நாடகம்: 3-வது நாளாக இன்று மாலை நடக்கிறது

செய்திப்பிரிவு

கதை, அரங்க அமைப்பு, நுட்பமான தகவல் களோடு, நாடகம் பார்க் கும் ரசிகர்களை அடுத்தகட்டத் துக்கு கொண்டுசெல்வதையே நோக்கமாகக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நாடகக் குழு ‘டம்மீஸ் டிராமா’.

இந்த குழுவினரால் கடந்த 2014-ல் அரங்கேற்றப்பட்ட நாடகம் ‘ஹனுமான்’, இந்திய விண்வெளித் துறையின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாயின் பிறந்தநாள் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் 16, 17, 18 தேதி களில் மாலை 7 மணிக்கு இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது. 2 நாட்கள் நடத்தப்பட்ட நிலை யில், 3-வது நாளாக இன்றும் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து ‘ஹனுமான்’ நாடகத்தை எழுதி இயக்கி யுள்ள வத்ஸன் கூறிய போது, ‘‘அறிவியலும், ஆன்மிக மும் எங்கள் இரு கண்கள். அதை ஒட்டியே எங்களது நாட கத்தின் கரு பெரும்பாலும் இருக்கும். இஸ்ரோவை மையப்படுத்தி ‘ஹனுமான்’ நாடகத்தை 2014-ல் அரங் கேற்றினோம். இந்திய விண் வெளித் துறையின் தந்தையான விக்ரம் சாராபாயின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை கொண் டாடும் வகையில் ‘ஹனுமான்’ அறிவியல் நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT