இலக்கியம்

உருதுக் கவிதைகளுடன் ரம்ஜான்

ஆசை

ரம்ஜான் பெருவிழா உற்சாகம் இன்னும் தீராத நிலையில் ஒருசில பழமையான ரம்ஜான் கொண்டாட்ட முறைகளை நாம் இழந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கொண்டாட்ட முறைகளுள் ஒன்றுதான் ஈகைப் பெருநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது. இந்திய இஸ்லாமியரின் கலாச்சாரம் அற்புதமானது. இந்தியத் தன்மையையும் பாரசீகத் தன்மையையும் தனக்கேயுரிய விதத்தில் கொண்டிருப்பது. அதன் நீட்சியாக இந்த வாழ்த்து அட்டைகள் இருந்தன.

இந்திய இஸ்லாமியக் கட்டிடங்களின் ஓவியங்களோடு அனுப்பப்படும் இந்த வாழ்த்து அட்டைகளின் பிரதான அம்சமே உருது கஜல்கள்தான். 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்த இந்தக் கலாச்சாரம் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நின்றுபோய்விட்டது வருத்தத்துக்குரியது. கிட்டத்தட்ட பொங்கல் வாழ்த்து கலாச்சாரத்துக்கு ஏற்பட்ட நிலைதான். இதுபோன்ற உருதுக் கவிதைகளுடன் அனுப்பப்பட்ட ஈகைப் பெருநாள் வாழ்த்து அட்டைகளின் சேகரிப்பாளர்கள்தான் யூஸுஃப் சயீது, அல்லி அட்னான், ஒமர் கான். இவர்களின் சேகரங்களை imagesofasia.com என்ற இணையதளத்தில் காணலாம். அந்த வாழ்த்து அட்டைகளில் காதலுக்குப் பிரதான இடம் உண்டு. உதாரணத்துக்கு இரண்டு கஜல்கள்:

‘உனது புருவங்களை நான் பார்க்கும் தருணம்தான்

எனக்கு ஈத்

வெறும் பிறையை மட்டும் பார்ப்பது அல்ல.’

‘பெருநாளின் முன்தினம் இது, எனது ஒட்டகமே

இன்னும் வேகம், எனதின்னுயிரின் ஊருக்குக் கொண்டுசெல் என்னை.’

SCROLL FOR NEXT