க.நா.சு. நேர்காணல்கள்
பதிப்பாசிரியர்: துரை. லட்சுமிபதி
அழிசி, விலை: ரூ.230
அன்றிருபத்தொன்றில்
(’மாப்பிளாக் கிளர்ச்சி’ பற்றிய வரலாற்று நாவல்)
ஆசிரியர்: றஹ்மான் கிடங்கயம்
தமிழில் க.ஐயப்பன்,
சீர்மை வெளியீடு, விலை ரூ.990
இந்திய நாத்திகம்
ஆசிரியர்: தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
நக்கீரன் வெளியீடு, விலை: ரூ.390
மூன்று தலைமுறையினரின் காதல்
தொகுப்பாளர்: அதிபிரகாசன்
புதுப்புனல், விலை: ரூ.300
ஆண்டான் (நாவல்)
சி.சரவணகார்த்திகேயன்
எழுத்து பிரசுரம், விலை: ரூ.499
இன்று... சென்னைப் புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு, ‘தமிழில் பாடி அல்லல் தீர்க்க’ என்ற தலைப்பில் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன், ‘படித்தால் எழுவோம்’ என்ற தலைப்பில் இதயகீதம் ராமானுஜம், ‘ஊடகமும் தமிழும்’ என்ற தலைப்பில் முத்துக்குமரன் ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பபாசி செயற்குழு உறுப்பினர் பி.குருதேவா வரவேற்புரையும் பபாசி நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர் எஸ்.சுவாமிநாதன் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.