‘வலியோடு முறியும் மின்னல்’ என்னும் பிரான்சிஸ் கிருபா கவிதைத் தொகுப்பைத்தான் இப்போது வாசித்துவருகிறேன். பிரான்சிஸின் கவிதைகளைத் திரும்ப வாசிக்கும்போது காலத்தின் தூசி படிய மறுக்கும், ஓர் இடம் போலத்தான் எனக்குத் தெரிகின்றன.
‘அரிவாள் ஜீவிதம்’ என்னும் மலையாள நாவலைத் தற்போது மொழிபெயர்த்துவருகிறேன். ஜோஸ் பழுக்காரான் எழுதிய இந்நாவல் கேரளத்தின் வயநாடு பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடையே பரவிய ஒரு நோய் குறித்துப் பேசுகிறது. அரிவாள் போல வளைந்திருக்கும் ஒருவகை புழுக்கள் மனித உடலுக்குள் புகுந்துவிடுவதால் ஏற்படும் நோய் இது.