இலக்கியம்

விடுபூக்கள்: செம்மீன் 50 ஆண்டுகள்

செய்திப்பிரிவு

செம்மீன் திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை கேரள மாநிலமே கொண்டாடிவருகிறது. உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட செம்மீன் நாவலின் ஆசிரியர் தகழி சிவசங்கரனின் புகைப்படம், படத்தில் நடித்த நட்சத்திரங்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை அட்டையில் போட்டுத் தனி மலரே வெளியிட்டிருக்கிறது கேரளத்தின் மாத்ருபூமி நாளிதழ்.

1965-ல் வெளியான 'செம்மீன்' தென்னிந்தியப் படங்களில் முதல் முறையாக ஜனாதிபதியின் 'தங்கப் பதக்கம்' விருதுபெற்ற திரைப்படம். அந்தப் பதக்கத்தின் படத்தைச் சுவரொட்டியில் வெளியிட்டு, 'தகழியின் செம்மீன்' என்றே விளம்பரம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT