இலக்கியம்

ஆவணம்: சிங்காரவேலரின் சிந்தனைப் பொழிவுகள்

மு.முருகேஷ்

புத்தக அறிமுகம்

தொகுப்பாசிரியர்: புலவர் பா.வீரமணி

புத்தகத்தில் என்ன இருக்கிறது?

தமிழ் மண்ணில் பொதுவுடை மைச் சிந்தனைகளை விதைத்ததிலும், தொழிலாளர் ஒற்றுமையைக் கட்ட மைத்ததிலும் முன்னோடி யானவர் சிங்காரவேலர். புலவர் பா.வீரமணி கடந்த பத்தாண்டுகளாக அரிதினும் முயன்று சிங்காரவேலரின் அறிவியல்பூர்வமான சிந்தனை களை, எழுத்துகளை, சமூகத் தொண்டினை, சொற்பொழிவு களைத் தேடித்தேடி கண்டெடுத்து நூல்களாக வழங்கி வருகிறார். சிங்காரவேலர் குறித்த பத்தாவது நூல் இது.

பின்னணி

1921-ம் ஆண்டு மே மாதம், சென்னை சூளையில் தொழிலாளர்கள் கூட்டத்தில் சிங்காரவேலர் ஆற்றிய உரை முதல் 1938-ம் ஆண்டு ஜூன் மாதம், ‘குடி அரசு’ இதழில் வந்த ‘கட்டாய இந்தி’ குறித்த உரை வரை 11 சொற்பொழிவுகள் கொண்ட ஆவணம் இது.

சிறப்பம்சம்

1934-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த சமதர்ம மாநாட்டில் சிங்காரவேலர் பேசிய 34 பக்க உரை, பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் அருமையான விளக்கக் கையேடாகும்.

சிங்காரவேலரின் சிந்தனைப் பொழிவுகள்

புலவர் பா.வீரமணி

வெளியீடு : அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்,

10 (E-55) மூன்றாம் குறுக்குத் தெரு,

திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு,

சென்னை 600 041.

விலை : ரூ.130/-

தொடர்புக்கு : 94442 44017

SCROLL FOR NEXT