இலக்கியம்

நடைவெளிப் பயணம்

செய்திப்பிரிவு

எழுதியவர்: அசோகமித்திரன்

கட்டுரைகள் விவரம்

தமிழ் வார இதழான குங்குமத்தில் நாற்பது வாரங்கள் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.

நூலின் சிறப்பம்சம்

59 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவரும் சிறந்த சிறுகதையாளர்களில் ஒருவரும் நேர்த்தியான கட்டுரையாளருமான அசோகமித்திரன் எழுதிய பத்திகள் இவை. எளிமையும், நுட்பமும், சுருக்கமும் கொண்ட மொழியில் எழுதும் அசோகமித்திரனின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையின் அனுபவத்தைத் தருபவை. இக்கட்டுரைகளில் 20-ம் நூற்றாண்டு இந்தியா, மெல்ல மெல்ல எப்படி மாறிவருகிறது என்ற சித்திரத்தை வெவ்வேறு உள்ளடக்கங்கள் சார்ந்து தருகிறார்.

இலக்கியம், அரசியல், வரலாறு, சமூகவியல் சார்ந்து நிலவும் பொது எண்ணங்களையும், மேம்போக்கான அபிப்பிராயங்களையும் கலைப்பவை அசோகமித்திரனின் எண்ணங்கள். சுற்றி நடப்பதைச் சந்தேகத்தோடும், தயக்கத்தோடும் விசாரிக்க முயல்பவை. குஷ்வந்த் சிங்கின் முக்கியமான ஆக்கம் அவரது சீக்கியர் வரலாற்று நூல்தான் என்கிறார். ஆளுமைகள்பற்றி எழுதும்போது, நுட்பமாக இவரது மொழி அவர்களைச் சம்பிரதாயம் பார்க்காமல் கீறிவிடுவதைப் பார்ப்பது சுவாரசியமானது.

நூலாசிரியர் இந்த நூலைப் பற்றி என்ன சொல்கிறார்?

இவை சமகாலத்தவை; அல்லது நான் வாழ்ந்த காலத்தவை. இந்த 83 ஆண்டுகளை நான் புரிந்துகொள்ளும் முயற்சியில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டவை. இவை படிப்போருக்கு ரசமாகவும் இருந்து, நம் காலத்தையே புரிந்துகொள்வது எவ்வளவு கடினமானது என்றும் நினைக்க வைத்தால் என் முயற்சி பயனளிக்காமல் போகாது.

நடைவெளிப் பயணம்
அசோகமித்திரன்,
சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை-04. தொலைபேசி: 044-42209191 விலை: ரூ.130/-

SCROLL FOR NEXT