இலக்கியம்

நூலின் குரல் - கவி கா.மு.ஷெரீப்

செய்திப்பிரிவு

கவிஞன்-எழுத்தாளன் என்பவன், சமுதாயத்தின் தாயை நிகர்த்தவன்: தாய் பத்தியமிருந்தால்தான் பிள்ளை ஆரோக்கியமாகத் திகழ முடியும். எனக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கட்கு இந்த நினைவு இருந்தது. எழுத்துப்பணி என்பது ஒரு தொழிலல்ல. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், எழுதுவது தான் வாழ அல்ல; தனது குடும்பம் வாழ அல்ல; சமுதாயம் வாழ எழுதுகோல் ஏந்துபவனே கவிஞன், எழுத்தாளன்! இந்த நினைப்பு பாரதிக்கு இருந்தது. பாரதிதாசனுக்கு இருந்தது. என் காலம்வரை வாழ்ந்த என்னினும் மூத்த கவிஞர்கட்கு இருந்தது! இன்றைய எழுத்தளர்கட்கும் கவிஞர்கட்கும் இருந்திட வேண்டும்!

கவி. கா.மு.ஷெரீப் கவிதைகள்
(நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடு)
தொகுப்பு: பேரா. காவ்யா சண்முகசுந்தரம்,
16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை-24.
தொலைபேசி: 044-23726882 விலை: ரூ.600/-

SCROLL FOR NEXT