இலக்கியம்

வாசிப்பு தரும் பேரனுபவம்

எழுத்தாளர்கள் சுபா

விண்ணுலகிலிருந்து மண்ணுக்கு நேரடியாக ஒரு படைப்பாளியாகவே அனுப்பப்பட்டவர் என்று நாங்கள் நம்பிய, நம்பும் ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்' புதினத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அதை வாசித்த காலத்தில் கதை நாயகன் சிட்டியின் வயதுதான் எங்களுக்கும்! சேரியில் வாழும் சிட்டிக்கு, வாழ்க்கை இறுதியில் மனித நேயத்தைக் கற்றுத்தரும். அதே படிப்பினைதான் எங்களுக்கும். மனித நேயத்தை மட்டுமே எழுத்தில் கொண்டாடிய, இந்தி பிதாமக எழுத்தாளர் பிரேம்சந்த் எழுதியிருக்கும் ஒவ்வொரு கதையும் அவற்றை வாசிக்கும் மாந்தர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தக் கூடியது.

மனித நேயத்தைக் கொண்டாடும் லியோ டால்ஸ்டாய், தி. ஜானகிராமன் போன்றவர்களின் எழுத்துக்களை வாசிக்கும்போதெல்லாம் நாங்கள் அடையும் ஆனந்தத்தைச் சொற்களால் ஒருபோதும் வெளிப்படுத்த இயலாது. இவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் ஞானம் எய்துவதற்கு ஒப்பான பேரானந்தத்தை அடைகிறோம்.

- ம. மோகன்

SCROLL FOR NEXT