இலக்கியம்

உல்லாசக் கப்பல் பயணம் ஓர் அனுபவம்

செய்திப்பிரிவு

ஆசியாவைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்து மக்கள் மத்தியிலும் கேளிக்கைகள் மற்றும் உல்லாசச் சுற்றுலாக்கள் இக் காலத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ‘க்ரூஸ்’ என்றழைக்கப்படும் உல்லாசக் கப்பலில் ஐந்து நாட்கள் மேற்கொண்ட பயண விவரங்களைச் சற்று கற்பனை கலந்து இந்நூலில் சிங்கப்பூரைச் சேர்ந்த கிருத்திகா எழுதியுள்ளார். ஒரு உல்லாசக் கப்பல் எப்படியிருக்கும் என்பதைச் சராசரி மக்கள் டைட்டானிக் போன்ற பிரபல திரைப்படங்கள் வழியாகவே அறிந்திருப்பார்கள். பயணத்துக்கு முந்தைய நாட்களில் பயண ஏற்பாடுகளைச் செய்வது தொடங்கி அனைத்து விவரங்களையும் வண்ணப் புகைப்படங்களுடன் சுவாரசியமாக விவரித்துள்ளது இந்நூல். ஐந்து நாளில் கப்பலிலேயே அரும்பும் காதல் கதை ஒன்றும் இடம்பெறுகிறது.

அறைகளின் வரைபடம் தொடங்கி நீச்சல் குளம், திரையரங்கு வரை கப்பலின் அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உல்லாசக் கப்பல் குறித்து எல்லாருக்கும் பொதுவாக எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் கேள்வி-பதில் என்று தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்ந்த எழுத்தாளரின் நடையில் இல்லாவிட்டாலும் ஒரு உல்லாசக் கப்பலில் ஐந்து நாட்கள் எப்படியிருக்கும் என்பதை சுவாரசியமாகச் சொல்வதால் இப்புத்தகம் கவனிக்கத் தக்கது.

உல்லாசக் கப்பல் பயணம்

சிங்கப்பூர்-மலேசியா-தாய்லாந்து

கிருத்திகா

வெளியீடு:

தமிழ் காமிக்ஸ் உலகம்,

எண்:6, கார்டன் தெரு,

காந்தி நகர்,

இந்துக் கல்லூரி,

சென்னை-72

தொடர்புக்கு:

9884062444

விலை:

ரூ.200/-

SCROLL FOR NEXT