இலக்கியம்

சுஜாதா விருதுகள் 2015

செய்திப்பிரிவு

சுஜாதா அறக்கட்டளை மற்றும் உயிர்மை பதிப்பகம் இணைந்து வழங்கும் 2015-ம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சுஜாதா சிறுகதை விருது, பாவண்ணன் எழுதிய ‘பச்சைக் கிளிகள்' தொகுப்புக்கும், நாவல் விருது விநாயக முருகனின் ‘சென்னைக்கு மிக அருகில்’ படைப்புக்கும் வழங்கப்படுகிறது. போகன் சங்கரின் கவிதைத் தொகுப் பான ‘எரிவதும் அணைவதும் ஒன்றே’, சுஜாதா கவிதை விருதுக்கு தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறது.

கட்டுரை நூலுக்கான விருது சமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’ கட்டுரைத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இணைய விருதை சுரேஷ் கண்ணன் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பெறுகிறார்கள். சிற்றிதழ் பிரிவில் ‘திணை’ மற்றும் ‘அடவி’ ஆகிய சிற்றிதழ்கள் விருதைப் பெறுகின்றன.

SCROLL FOR NEXT