தமிழ் மொழியைப் பொறுத்தவரை பழைமையும் தொடர்ச்சியும் கொண்ட தமிழிலக்கண நூல்களுள் தொல்காப்பியம் முதன்மையானது.
தொல்காப்பியர் வரலாறு, தொல்காப்பியர் காலம், தொல்காப்பியப் பதிப்புரை, உரையாசிரியர்கள் வரலாறு, உரையாசிரியர்களின் உரைத்திறன் தொடர்பான ஏற்பும் மறுப்புமான விவாதங்களும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இதுவரை வெளிவந்த முக்கியமான தொல்காப்பியப் பதிப்புரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் குறித்து அறிய உதவும் அருமையான ஆய்வுநூல் இது. - எஸ்.ஆர்.எஸ்
தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்
பதிப்பாசிரியர் முனைவர் இரா.வெங்கடேசன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை- 600 098
தொடர்புக்கு: 044- 26241288
விலை: ரூ. 340