இலக்கியம்

சமகால நாவல்: ஓர் உரையாடல்

அமுதன்

படைப்புகள் உருவாகுமளவுக்குப் படைப்புகள் பற்றிய பேச்சுக்கள் உருவாவதில்லை என்பது சமகாலச் சூழலின் தன்மைகளில் ஒன்று. இந்நிலையில் மார்ச் 4, 5 தேதிகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இரு நாள் கருத்தரங்கம் முக்கியத்துவம் பெறுகிறது. அண் மைக் கால நாவல்களைப் பற்றி இந்தக் கருத்தரங்கில் விரிவாகப் பேசப் பட்டது. செம்மொழி நிறுவனத்தின் முயற்சியில் நடைபெற்ற இக்கருத் தரங்கில் ஜெயமோகன், கோணங்கி, இமையம் முதலானோர் பங்கேற்றனர். புதிதாக நாவல் எழுதியுள்ள படைப் பாளிகளுடனான உரையாடலும் கருத் தரங்கில் முக்கிய இடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

2000-க்குப் பின்னான தமிழ் நாவல்களின் விரிவான பரப்பையும் போக்குகளையும் நபர்களையும் ஒரு இலக்கிய வரலாற்றாசியரின் பார்வையில் இமையம் முன்வைத்தார்.

தன்னுடைய எழுத்து மொழியின் தனித்துவத்தைக் கைவிட்டுவிடாமல் பேசத் தொடங்கிய கோணங்கி, நாடோடி, குறத்தியாறு போன்ற ஒரு சில நாவல்களைக் குறிப்பிட்டதோடு தனது நாவல்களும் தனது மொழியும் இயங்கும் தளத்தைப் பற்றி விளக்கி னார். நவீனத்துவத்தை எழுதுவதில் தொடங்கிய தமிழ் நாவல் இலக்கியம் 2000-க்குப் பிறகு பெருநாவல்களை எழுதும் உலகப் போக்கோடு இணைந்துகொள்ளத் தொடங்கியுள்ளதை ஜெயமோகன் விளக்கினார்.

இம்மூவரின் உரைக்குள்ளும் “2000-க்குப்பின் தமிழில் எழுதப்படும் நாவல்கள் உலக இலக்கியங்களுக்கு இணையாக இருக்கின்றன” என்ற கருத்தோட்டம் இழையோடியது.

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணியின் நாவல்கள் குறித்த ஆய்வரங்கமாக இரண்டாவது அமர்வு நடைபெற்றது. புதிய நாவலாசிரியர்களுடனான உரையாடல் அரங்கு. இந்த அமர்வில் இரா.முருகவேள் (மிளிர்கல்) குமாரசெல்வா (குன்னிமுத்து) ஏக்நாத் (கிடைகாடு), செல்லமுத்து குப்புசாமி (கொட்டுமுழக்கு), முஜிப். ரகுமான் (மகாகிரந்தம்), அறிமுகத்துக்குப் பின் ஒவ்வொருவரும் தாங்கள் எழுத வந்த பின்னணியைச் சுவாரசியமாகச் சொன் னார்கள். தங்களுக்குக் கிடைத்த தூண்டுகோல், கவனிப்பு, விருது வழங்கல் போன்ற கவனிப்புகள் தொடர்ந்து எழுதத் தூண்டிக்கொண் டிருக்கின்றன என்றார்கள்.

செம்மொழி சார்ந்த பழைய பெருமையோடு நவீன இலக்கியம் புதிய பெருமைகளைக் கண்டு சொல்லும் கருத்தரங்குகளின் தேவையை இந்த இரண்டு நாள் நிகழ்வுகள் உணர்த்தின.

SCROLL FOR NEXT