இலக்கியம்

பெட்டகம் - மகாபாரதம் கும்பகோணம் பதிப்பு

செய்திப்பிரிவு

மகாபாரதம். உலகின் மிகப் பிரம்மாண்டமான இதிகாசம். ஏராளமான பாத்திரங்கள், கிளைக் கதைகள், தத்துவங்கள், போர்க்களக் காட்சிகள் என்று இதில் கொட்டிக்கிடக்கும் விஷயங்கள் ஏராளம். ஆங்கிலம், பாரசீகம் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட மகாபாரதத்தின் விரிவான தமிழாக்கப் பதிப்பு 1920-களில் வெளியானது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட மகாபாரதத்தின் 18 பர்வங்களும் (பகுதிகள்), பல ஆண்டுகாலக் கடின உழைப்பில், டி.வி. ஸ்ரீநிவாஸாசார்யரால் சம்ஸ்கிருதத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழறிஞர் ம.வீ. ராமானுஜாசாரியாரால் தொகுக்கப்பட்டன. இந்த மகா காவியம், தமிழ் மட்டும் தெரிந்தவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற முனைப்புடன், பொருளாதாரச் சிக்கல்கள், புறக்கணிப்புகள், அலைக்கழிப்புகளுக்கு இடையில் இதை வெளியிட்டார்

ம.வீ. ராமானுஜாசாரியார். ‘ஸ்ரீ மஹாபாரதம் பிரஸ்’ வெளியிட்ட இந்தப் புத்தகம், ஊரப்பாக்கம் ‘ஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன்ஸ்’பதிப்பகத்தால், முன்வெளியீட்டுத் திட்டத்தின்கீழ் 2006-ல் வெளியிடப்பட்டது. மகாபாரதம் கும்பகோணம் பதிப்பு என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பு, இதிகாசம் படிக்க விரும்புபவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.

SCROLL FOR NEXT