இலக்கியம்

மாற்று விமர்சனங்கள்

செய்திப்பிரிவு

தாமரை, புது எழுத்து, மாற்றுவெளி உள்ளிட்ட நான்கு இதழ்களில் பத்தாண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட பதினைந்து இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு ‘எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்'. சமூகத்தால் ஒடுக்கப்படும் பெண்கள், தலித்துகள், வண்ணார், பாலியல் தொழிலாளிகள், பழங்குடியினர் ஆகியோர்குறித்த கரிசனம் மிளிரும் கட்டுரைகள் இவை. அறம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி மதிப்பீடுகளுக்கு எதிரான குரலை உள்ளடக்கிய கட்டுரைகளாக இவை தோற்றம் கொள்கின்றன. பெண்ணியம் சார்ந்த ஆய்வும் விமர்சனமும் இக்கட்டுரைகளின் மையங்கள்.


எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்
சுப்பிரமணி இரமேஷ்
ஆழி பதிப்பகம், 15, மாரியம்மன் கோவில் தெரு,
பவித்திரம், திருவண்ணாமலை-606806 கைபேசி:9994880005
விலை ரூ.120

- அரூபினி

SCROLL FOR NEXT