இலக்கியம்

தொல்காப்பியத்திலிருந்து விரியும் நாவல்

செய்திப்பிரிவு

காதலும் வேட்கையும்
செ. கணேசலிங்கன்
விலை ரூ. 90
வெளியீடு: குமரன் பப்ளிஷர்ஸ்
12/3 மெய்கை விநாயகர் தெரு,
சென்னை 600 026

‘செவ்வானம்’, ‘மரணத்தின் நிழலில்’ உட்பட பல நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவருமான செ. கணேசலிங்கன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். அரை நூற்றாண்டுக்கு மேலாக இன்றும் தொய்வில்லாமல் இலக்கியக் களத்தில் செயல்பட்டுவரும் செ. கணேசலிங்கனின் உழைப்பு பாராட்டுக்குரியது. அவருடைய சமீபத்திய நாவல்தான் ‘காதலும் வேட்கையும்’.

தொல்காப்பியத்திலிருந்து தூண்டுதல் பெற்று, ‘காதல்’, ‘வேட்கை’ ஆகிய இரண்டு சொற்களையும் ஆய்வதே இந்த நூலின் முக்கிய நோக்கம் என்று கணேசலிங்கன் தன் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். நாவல் முழுவதும் தொல்காப்பியம் நிழலாகப் பின்தொடர்கிறது.

- ரங்கு

SCROLL FOR NEXT