சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்
வீ.எம்.எஸ். சுபகுணராஜன்
வெளியீடு: கயல் கவின் புக்ஸ்
28, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம்
விலை: ரூ.160
கைப்பேசி: 9944583282
திரைப்படம் திரையிடப்பட்ட கணம் முதல் இணையதளங்களில் விமர்சனக் கட்டுரைகள் ஜெட் வேகத்தில் வெளிவரும் சூழலில், திரைப்படங்கள் பற்றிய ஆழமான புரிதலுடன் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருபவர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன். அவரது திரைப்படக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ‘சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்’.
தமிழ்த் திரைப்படங்களில் சாதியின் விளைவுகள் வெவ்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. சாதியை உள்ளடக்கியும் சாதியைத் தவிர்த்தும் நவீன வாழ்வின் தன்மையும் சினிமாவின் பிரதிபலிப்பும் எப்படி ஒத்துப்போகின்றன, எங்கே மாறுபடுகின்றன போன்ற பல விஷயங்களைப் பற்றி சுபகுணராஜன் இந்தப் புத்தகத்தில் ஆழமாக விவாதித்திருக்கிறார். திரைப்படங்களைக் கோட்பாட்டுரீதியில் அணுகும் புத்தகங்கள் தமிழில் அரிது. அந்த வகையில் முக்கியமான புத்தகம் இது.
- ரிஷி