இலக்கியம்

பெட்டகம் - 03/01/2015

செய்திப்பிரிவு

தமிழிலக்கியத்தின் தனிப் பெருமைகளில் ஒன்றான திருக்குறளைப் பற்றி எழுதாத அறிஞரோ எழுத்தாளரோ இல்லை எனலாம். இலக்கியத்துடன் நேரடியாகத் தொடர்பற்ற பிற துறை ஆளுமைகளும் திருக்குறளை ஏதாவது ஒரு வகையில் தமது எழுத்தில் பிரதிபலித்திருப்பார்கள். சென்ற நூற்றாண்டின் முதல் பாதியில் திருக்குறளைப் பற்றிப் பல்வேறு ஆளுமைகளால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார் முல்லை முத்தையா. 1959-ல் வெளியான புத்தகம் இது.

மயிலாப்பூர் இன்ப நிலையம் வெளியிட்ட இந்த நூலின் விலை மூன்றரை ரூபாய். உ.வே.சாமிநாதய்யர், திரு.வி.க., சோமசுந்தர பாரதியார், நாமக்கல் கவிஞர், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, யோகி சுத்தானந்த பாரதியார், பெரியார் ஈவெ.ரா., அண்ணா, கருணாநிதி, கல்கி முதலான பலர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.

பல்வேறு இதழ்களில், பல்வேறு சமயங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து வழங்குவது சாதாரண காரியமல்ல. மிகுந்த சிரத்தையுடன் இதைச் செய்து, திருக்குறளுக்கு முக்கியமான பதிவைத் தந்துள்ள முல்லை முத்தையாவின் பணி பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது.​

SCROLL FOR NEXT