இலக்கியம்

கதையாக நீளும் வரலாறு

செய்திப்பிரிவு

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள்
ஜே. டால்பாய்ஸ் வீலர்
தமிழில் க. ஜெயராமன்
விலை ரூ. 325
சந்தியா பதிப்பகம், எண்.57, 53-வது தெரு,
ஒன்பதாவது அவன்யு, அசோக் நகர்,
சென்னை-83, தொலைபேசி: 044 24896979

நவீன இந்தியாவின் வரலாற்றுக்குத் தொடக்கமாக அமைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் தொடக்க காலம் இன்னும் விறுவிறுப்பானது. அதைக் காலவாரியாகப் பேசுகிறது இந்நூல். ஒரு நாவலை வாசிப்பதுபோல, ஒரு வரலாற்று நூலை இலகுவான நடையில் தர முடியும் என்பதற்கு இந்நூல் சாட்சி.

சென்னையின் இதழியல் வரலாற்றில் ‘மெட்ராஸ் ஸ்பெக்டேட்டர்’ (Madras Spectator) பத்திரிகை முக்கியமானது. அதன் ஆசிரியராக பணியாற்றியவர் ஜேம்ஸ் டால்பாய்ஸ் வீலர் என்ற ஆங்கிலேயர். சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து, பின்னர் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வரலாற்றாசிரியர் இவர்.

1600-களில் தொடங்கி 1770-கள் வரையான தொடக்க கால பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாற்றை ‘எர்லி ரெக்கார்ட்ஸ் ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்ற நூலாகத் தொகுத்தார் வீலர். 1897-ல் வெளியான இந்த நூலை உயிர்ப்புடன் மொழிபெயர்த்திருக்கிறார் க. ஜெயராமன்.

- ஜெயந்தன்

SCROLL FOR NEXT