இலக்கியம்

பெட்டகம்

செய்திப்பிரிவு

மக்ஸிம் கார்கி எழுதிய நாவலான ‘தாய்’ இன்றும் வாசிப்புலகில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. 1906-ல் வெளியான இந்த நாவல், ரஷ்யாவின் கம்யூனிஸப் புரட்சிப் பின்னணியில் எழுதப்பட்டது. பல ஆண்டுகள் தொழிற்சாலையில் பணிபுரிந்தும் ஏழ்மை யிலிருந்து விடுபட முடியாத மூத்த தொழிலாளர்களின் நிலையைக் காணும் பாவெல் என்ற இளம் தொழிலாளி, பிற தொழிலாளிகளுடன் இணைந்து புரட்சிக்கான ஆயத்தப் பணிகளில் இறங்குகிறான். புத்தக வாசிப்பு, ரகசிய சந்திப்பு என்று இயங்கும் தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

மகனது செயல்பாடுகளால் குழப்பமடையும் அவனது தாய், ஒரு கட்டத்தில் அவனையும் தொழிலாளர்களின் நிலையையும் புரிந்துகொள்கிறாள். புரட்சியாளர்களுக்கு உதவ முடிவெடுக் கிறாள். இதற்கிடையில், தொழிலாளர்கள் போராட்டம் முற்றுகிறது; பாவெல் கைதுசெய்யப்படுகிறான். இதையடுத்து, தனது மகனின் புரட்சிப் பாதையில் துணிவுடன் இறங்கும் அந்தத் தாய், ரஷ்யாவெங்கும் பயணித்து புரட்சிக்கு ஆதரவு திரட்டுகிறாள் என்று விரியும் மகத்தான படைப்பு இது. “தொழிலாளர்கள் இதுவரை, புறத்தூண்டுதலின்றி உள்ளுணர்வு உந்த, புரட்சிப் போராட்டத்தில் தாமாகவே ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

ஆனால், இப்போது தமக்குப் பயன்படும்படி ‘தாய்’ நாவலைப் படிக்கலாம்” என்று ரஷ்யப் புரட்சியாளர் லெனின் குறிப்பிட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT