இலக்கியம்

இப்போது படிப்பதும் எழுதுவதும்: கவிஞர் இசை

செய்திப்பிரிவு

ஞானக்கூத்தன் கவிதைகள் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆழி வெளியீடு. மரபின் காதும் நவீனத்தின் மனமும் கொண்டவை என்று ஞானக்கூத்தனின் கவிதைகளைச் சொல்லலாம். 2000-க்குப் பிறகு தமிழ் கவிதைகளில் நிகழ்ந்த பெருவிளையாட்டுகளுக்கு அவரது கவிதைகள் ஒரு விதத்தில் துவக்கப் புள்ளி. ‘ஊர் புகழும் மார்கழியை ஏன் டிசம்பர் கைவிட்டுப் போகிறது?’ என்கிற அவரது வரி இந்த மார்கழியில் அடிக்கடி வந்து தொல்லை செய்கிறது.

ஒரு பெரிய நாவலை எழுதிவிட வேண்டும் என்கிற ரகசியத் திட்டமும் ஆசையும் எல்லாரையும் போல என்னிடமும் உண்டு. ஆனால், என்ன எழுதுவது என்றுதான் தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த திரைப்படம் ‘பிசாசு’. அந்தப் படம் என்னை ரொம்பவும் தொந்தரவு செய்தது. என்னைப் பாதித்த அந்தக் கலைப் படைப்பைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

SCROLL FOR NEXT