இலக்கியம்

பிறமொழி நூலறிமுகம்: வெடிப் பூக்களாய்ச் சில கவிதைகள்

வீ.பா.கணேசன்

இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில எழுத்தின் வாசனையே தனிதான். அதிலும், கவிதைகள் என்பவை சமீப காலமாய் அபூர்வம்தான். இந்தப் பின்னணியில் சென்னையைச் சேர்ந்த ஜே. வசந்த் குமாரின் கவிதைத் தொகுப்பு கொஞ்சம் வித்தியாசமாய் என்னை பாதித்தது.

பள்ளி நாட்களில் அவரிடம் தொடங்கிய இந்த (ஆங்கில) கவிதைப் பித்து அறியாப் பருவத்தில் சற்றே மறைந்துபோய் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது காலூன்றி நின்ற பருவத்தில். 84 கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் ஆங்காங்கே வெடித்தெழும் உணர்வுகள் சமூகத்தின் பல்வேறு பக்கங்களை பிரதிபலிக்கும் ஆடியாய் ஒளிவிடுகின்றன.

கவிதையை ஒரு கன்னியாய் உருவகித்து, ஆங்காங்கே வெளிப்படும் ஒளிக்கீற்றுகள் இத்தொகுப்பின் தோரணமாய்த் துலங்குகின்றன. அதிகம் பயணிக்காத பாதையில் ஒரு கவிஞர்… இன்னும் பயணிக்க நிறைய பாதைகள் காத்திருக்கின்றன!

SCROLL FOR NEXT