இலக்கியம்

நல் வரவு: ஆதிமுகத்தின் காலப்பிரதி

செய்திப்பிரிவு

‘எனக்கான தனித்த வலி மிகுந்த தருணங்களில் நான் தேக்கி வைத்திருக்கும் சொற்களை என்ன செய்வது?’ என்கிற கேள்வியை முன்னிறுத்திக் கவிதைகள் எழுதிவரும் இரா. பூபாலனின் மூன்றாவது தொகுப்பு.

காலத்தின் திசை வழியே தான் பார்த்த, தன்னைப் பாதித்த அனுபவக் குறிப்புகளைக் கவிதைகளாக்கியுள்ளார்.

‘கதைப் புத்தகத்தின்/ பக்கத்தில்/ புலி துரத்திக்கொண்டோடும்/ மானுக்குக்/ கூடுதலாக இரண்டு/ கால்கள்/ வரைகிறது/ குழந்தை’ போன்ற குழந்தைகளின் உலகைச் சித்தரிக்கும் கவிதைகள் ஈர்க்கின்றன.

விலை: ரூ.70, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், பொள்ளாச்சி- 642001, 9842275662

SCROLL FOR NEXT