இலக்கியம்

கக்கனை மறந்துவிட்டோமா நாம்?

செய்திப்பிரிவு

பலருடைய மேடைப் பேச்சுகளில் நேர்மைக்கும் நியாயத்துக்கும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் பெயராகப் பலரது நெஞ்சங்களில் இப்போதும் வாழ்பவர் முன்னாள் அமைச்சர் கக்கன்.

தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் நிஜமாகவே எளிமையான, தூய்மையான மனிதராகவே கக்கன் வாழ்ந்து மறைந்திருக்கிறார். மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் 1909, ஜூன் 18 அன்று பிறந்த கக்கனுக்கு, நாட்டு விடுதலைக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறையைத் தூண்டியது காந்தியின் செயல்பாடுகள்.

காமராஜரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட கக்கன், 1957-ல் சமயநல்லூர் தொகுதியிலிருந்து சென்னை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு எதிராக திமுக தனது வேட்பாளரை இத்தொகுதியில் நிறுத்தாதது, காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கன், அமைச்சர் பதவியை விட்டு இறங்கியதும் குடிமக்களுள் ஒருவராக நகரப் பேருந்துக்காகக் காத்திருந்தது போன்ற பல வரலாற்றுச் செய்திகளை இப்புத்தகம் பேசுகிறது.

எளிமையான மனிதரைப் பற்றிய புத்தகத்தை இன்னும் எளிமையாக எழுதியிருக்கலாம்.

SCROLL FOR NEXT