1882-ல் பிறந்து 1921-ல் இயற்கை எய்திய மகாகவி பாரதியார் வாழ்ந்தது 39 ஆண்டுகள் மட்டுமே.
ஆனாலும், இந்திய சுதந்திர விடுதலைக்கும் தமிழ் இலக்கியச் செழுமைக்கும் வளமான பங்களிப்பைச் செய்தவை பாரதியாரின் படைப்புகள்.
பாரதியார் பிறந்து 134 ஆண்டுகாலம் கடந்தோடிவிட்ட நிலையில், இன்னமும் பாரதியாரின் படைப்புகள் குறித்த புதுப்புது செய்திகள் கிடைத்த வண்ணமுள்ளன. பாரதிக் காதலரான முனைவர் தாமோதரக் கண்ணன், பாரதி குறித்த சில அரிய செய்திகளோடு, நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களையும் தேடிக் கண்டெடுத்து இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரிய பணி.
விலை:ரூ.60, மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600108, தொலைபேசி- 044- 2361039