இலக்கியம்

ஜெயந்தன் சிறுகதை விருது

செய்திப்பிரிவு

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தனின் நினைவாக ஆண்டுதோறும் ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது’ கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு, தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டை முன்னிட்டு, 2016-17 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கு ‘ஜெயந்தன் சிறுகதை விருது’ வழங்கப் படவிருக்கிறது. ஜெயந்தனின் மகன் சீராளன் ஜெயந்தனின் ஃபேஸ்புக் பக்கத்தில் (Seeralan Jeyanthan) வாசகர்கள் தங்கள் பரிந்துரைகளைப் பதிவிடலாம். பரிந்துரைக்கப்படும் சிறுகதைத் தொகுப்பு முதல் பதிப்பாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் தொகுப்புக்கு ரூ. 50,000 பரிசாக வழங்கப்படும். 2017- டிசம்பர் 31-க்குள் வரும் பரிந்துரைகள் மட்டுமே இந்த விருதுக்காகப் பரிசீலிக்கப்படும். விருது வழங்கும் நிகழ்ச்சி 2018 பிப்ரவரி 7 அன்று, அதாவது ஜெயந்தன் நினைவு தினத்தன்று நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT