கனிமொழி முத்துச்சாமி:
ஓஷோவின் ‘குரு’, ‘உயிர்வேதம்’, ‘கால்களின்றி நட’, பாலகுமாரனின் ‘மகாபாரதம் பாகம் - 1’, கல்கியின் ‘அலை ஓசை’, பாரதி பாஸ்கரின் ‘நதிபோல ஓடிக்கொண்டிரு’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’ என ஏழாயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கியிருக்கிறோம். வருஷா வருஷம் புத்தகக் காட்சிக்குக் குடும்பத்தோட வருவோம். போன வருஷம் ஐயாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினோம். நிறை என்று பார்த்தால் நிறைய பதிப்பகங்களை இங்கே பார்க்க முடிகிறது. ஆனால், எந்த பதிப்பகத்தாரும் விற்பனையாளரும் இந்தப் புத்தகம் நல்ல புத்தகம், இதில் இந்தந்த விஷயங்கள் இருக்கின்றன என்று சொல்வதில்லை.