தமிழ் உணர்வும் சுயமரியாதையும் மிக்க அண்ணல்தங்கோ இயற்றிய கவிதைகள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கின்றன.
தமிழர் விடுதலை, தமிழர் எழுச்சி, தமிழ்ப் பெண்களின் கல்வி, கடவுள் மறுப்புக் கொள்கை, ஆரியர் சூழ்ச்சி என்று பல தலைப்புகளில் பாடல்களை இயற்றிய அண்ணல்தங்கோ, விடுதலைப் போரில் ஈடுபட்டு சிறைசென்றவர்.
பள்ளி, கல்லூரி சென்று பாடம் படிக்காமல் அனுபவம், சுய படிப்பு மூலம் உலகை உணர்ந்த அண்ணல் தங்கோவின் தமிழ்ப் பற்றும் தமிழ் இனப் பற்றும் இந்தப் பாடல்களில் விரவி நிற்கின்றன.
விலை ரூ.150, அண்ணல்தங்கோ பதிப்பகம், எண்:3?1, கங்கையா நிழற்சாலை, சக்தி நகர், காமராசர் சாலை, சென்னை-89.