தொன்மைச் சிறப்பும் வரலாறும் கொண்ட தமிழகத்தின் பல்வேறு அம்சங்கள் இன்னும் தோண்டியெடுக்கப் படவில்லை. இந்த நிலையில், குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற ஒரு சிலரின் முயற்சிகள் நம் பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதில் உதவுகின்றன. இந்த நூல் கி.பி. 600-ல் ஆரம்பித்து 1850 வரையிலான தஞ்சாவூரின் வரலாற்றைக் கல்வெட்டுகள், கோயில் கலை முதலான ஆதாரங்களைக் கொண்டு அரிய தகவல்கள், படங்களுடன் பேசுகிறது. தவற விட்டுவிடக் கூடாத நூல்.
தஞ்சாவூர்
டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்
ரூ. 400, அன்னம் வெளியீடு.