தமிழில் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவரான அம்பையின் சிறுகதைகள் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. பிரான்ஸில் உள்ள புகழ்பெற்ற ஜுல்மா (Zulma) பதிப்பகம் வெளியிடும் இந்தப் புத்தகம் டிசம்பரில் அச்சாகி, வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளை வெளியிடும் ஜுல்மா, ஆண்டுக்கு 12 புத்தகங்களை மட்டுமே வெளியிடுகிறது. வைக்கம் முகம்மது பஷீர் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை இப்பதிப்பகம் பிரெஞ்சில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது.
மொழிபெயர்ப்புப் படைப்புகளை வெளியிடுவதில் முனைப்புடன் இயங்கும் பதிப்பகம் இது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் உதவியுடன் டொமினிக் என்ற பிரெஞ்சுக்காரர் அம்பையின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்காக அம்பை பாரீஸுக்குச் செல்லவிருக்கிறார்.